இரண்டு உயிர் போச்சே! இன்னும் அவலநிலை மாறல! எடப்பாடி பழனிச்சாமி வேதனை! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி கடந்த 15ஆம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ கிராம் பரிசோதனையின் போது தவறான சிகிச்சையால் அவருடைய வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி படம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுல தான் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன. 

கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த விடியா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு.

 மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் தவறான சிகிச்சையால் தனது கையை இழந்து தவிக்கும் திருமதி.ஜோதிக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்கவும், அவருக்கு தக்க இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS condemns woman hand remove at Rajiv gandhi hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->