தமிழக நகராட்சித் துறையில் ஊழல் முறைகேடு; சிக்கிய முக்கிய அதிகாரிகள்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை கடிதம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்​தில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யின்​கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட அரசு ஒப்​பந்​தங்​கள் மற்​றும் பணி நியமனங்​களில் பெரும் முறை​கேடு​கள் மற்​றும் ஊழல் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டி​யிருந்​தது. 

இது குறித்து ஏற்கனவே, அமலாக்​கத் துறை தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர், டிஜிபி மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு 02 முறை கடிதங்​களை அனுப்பியுள்ளது. அதன்படி, அரசு ஒப்பந்​தங்​களைப் பெறு​வதற்​காக டெண்​டர்கள் முறை​கேடாக கையாளப்​பட்​டுள்ளதாகவும், அதில் ஒப்​பந்​தத் தொகை​யில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்​ச​மாக வசூலிக்​கப்​பட்​ட​தாக குற்​றம் ​சாட்​டப்​பட்​டுள்​ளது. 

அத்துடன், இந்த தொகை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் திரட்​டப்​பட்​ட​தாக​வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த லஞ்​சத் தொகை​யின் நேரடி பயனாளி​களாக திமுக கட்​சி​யைச் சேர்ந்த சில தலை​வர்​கள் இருந்​துள்ளதாகவும், அந்த நிதி அவர்​களுக்கு சென்​ற​தாக​வும் அமலாக்​கத் துறை அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாக தகவல்கள் ​வெளியாகின.

இந்​நிலை​யில், குறித்த டெண்​டர் முறை​கேட்​டில் புதிய திருப்பமாக சில ஐஏஎஸ் மற்​றும் ஐபிஎஸ் அதி​காரி​களும் தொடர்​புடைய​வர்​களாக இருக்​கலாம் என்று அமலாக்​கத் துறை தனது சமீபத்​திய கடிதத்​தில் அதிர்ச்சி தகவலை குறிப்​பிட்​டுள்​ளது. 

அதில், குறிப்பாக கவி பிர​சாத், டி.ரமேஷ், கே.என்.மணிவண்​ணன், பிரபு உள்​ளிட்​டோர் இந்த ஊழல் செயல்​பாடு​களில் முக்​கிய பங்​காற்​றியுள்ளதாக கூறப்​பட்​டுள்​ளது. இவர்​களின் செல்​போன்​களில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட உரை​யாடல்​கள் முக்​கிய ஆதா​ரங்​களாக இருப்​ப​தாக​வும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைச்​சர்​களுக்கு சாதக​மாக டெண்​டர் நிபந்​தனை​களை மாற்​றியமைப்​ப​தில் சில ஐஏஎஸ் அதி​காரி​கள் துணை நின்​ற​தாக​வும் அந்த கடிதத்​தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மாநக​ராட்​சி​யின் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கான சீருடை கொள்​முதல் ஒப்பந்​தத்தை குறிப்​பிட்ட ஒரு​வருக்கு பெற்​றுத் தரு​வதற்​காகவும், அடிக்​கடி சர்ச்​சை​யில் சிக்​கும் ஒரு இளம் ஐபிஎஸ் அதி​காரி இடைத்​தரகரை தொடர்​பு​கொண்​ட​தாக​வும், இதற்​கான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் அமலாக்​கத்துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதி​காரி ரகசிய மற்​றும் சென்​சிட்​டிவ் தகவல்​களை மூன்​றாம் நபர்​களு​டன் பகிர்ந்​த​தாக​வும், இது இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு முரணான செயல் எனவும் கூறப்​பட்​டுள்​ளது. அத்துடன், இது குறித்து தனிப்​பட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் அமலாக்​கத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், வசூலிக்​கப்பட்​டதாகக் கூறப்​படும் லஞ்​சத் தொகை உள்​நாடு மற்​றும் வெளிநாடு​களுக்கு ஹவாலா முறையில் சட்​ட​விரோத​மாக பரி​மாறப்பட்​ட​தாக​வும் கூறப்பட்டுள்ளது. இந்த விவ​காரம் தொடர்பாக தமிழக காவல்​துறை உடனடி​யாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசா​ரணை தொடங்க வேண்டும் என்​று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஆதா​ரங்​கள் இருந்​தும் நடவடிக்கை எடுக்​கத் தவறி​னால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களும் பொறுப்​பேற்க வேண்​டிய நிலை ஏற்​படும் என்​றும் அந்தக் கடிதத்​தில் அமலாக்கத் துறை எச்சரித்துள்ளது. மேலும், நகராட்சி நிர்​வாகத் துறை​யில் நடந்துள்​ள​தாகக் கூறப்​படும் இந்த முறை​கேடு விவ​காரத்​தில் உயர்​மட்ட அதி​காரி​கள் பெயர் வெளி​யாகியுள்ளமை அரசி​யல் வட்டாரங்​களில்​ ​அதிர்​ச்சியை ஏற்​படுத்​தியுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Department letter that key officials are also involved in the municipal administration department corruption


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->