#BigBreaking || சற்றுமுன் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை., உச்சகட்ட பரபரப்பப்பில் இரு மாநிலங்கள்.!       - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற பொதுதேர்தலோடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோதலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கியது. 

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன்  55 மையங்களில் தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஒரே ஒரு மையத்தில் எண்ணப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 3-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 பேரவைத் தொகுதிகள், குஜராத் பேரவையில் காலியாக உள்ள 8 இடங்கள், உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்குக்  நடைபெற்ற இடைத்தோதல் வாக்கு எண்ணிக்கையும் சற்றுமுன் தொடங்கியுள்ளது.

மேலும், நாகாலாந்து, ஜாா்க்கண்ட், ஒடிஸா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா இரு பேரவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கா் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஒரு இடத்துக்கும், மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கும்  நடைபெற்ற இடைத்தோதல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் சற்றுமுன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் போலவே, மினி சட்டமன்ற தேர்தல் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. காங்கிரசை இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அம்மாநிலத்தில் அமைந்தது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து இடைத்தேர்தல் நடந்துள்ளது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 9 இடங்களில் வெற்றி பெற்றால்தான், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக  ஆட்சி தொடரும். எனவே இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற பொது தேர்தல் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலின் முடிகளை எதிர்பார்த்து பாஜக - காங்கிரஸ் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.

இன்று பிஹார், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election counting start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->