எடப்பாடி பழனிச்சாமியின் 26ம் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு...! காரணம் தெரியணுமா...?
Edappadi Palaniswamis cyclone tour 26th postponed Want know reason
அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டதில் தெரிவித்திருப்பதாவது,"அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம்;
தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி 8.8.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த சுற்றுப் பயணத் திட்டத்தில், 26.7.2025 அன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 29.7.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதிமுக தலைமைக் கழகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Edappadi Palaniswamis cyclone tour 26th postponed Want know reason