நாட்டிற்கு துரோகம் செய்தது ஸ்டாலினின் மாடல் ஆட்சிதான்: எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!
Edappadi Palaniswami retorts that it was Stalin DMK regime that betrayed the country
'' நாட்டிற்கு துரோகம் செய்தது தி.மு.க., தான். ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனர்.ஆனால் துரோகம் செய்தது நாங்கள் இல்லை. தி.மு.க., தான் நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், நான் முதல்வராக இருந்த போதும், ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது எனவும் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது என்றும், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. இது குறித்து தினசரி செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து இ.பி.எஸ் மேலும் பேசுகையில், மத்தியில் தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏன் கல்விக் கொள்கையில் கவனம் செலுத்தவில்லை. அப்போதே கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். திமுகவிற்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பற்றியும், மாணவர்கள் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் தி.மு.க.,வின் வாடிக்கையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையில், பந்தல்குடி கால்வாயை மறைத்தது மோசமான ஆட்சி என்பதற்கு சான்று என்றும், அவர்களுக்கே கால்வாயை பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் முதலமைச்சர் வரும் போது திரைபோட்டு மறைத்ததோடு, சாக்கடை நீர் செல்லும் கால்வாயை திரை போட்டு மறைத்தனர்.ஆனால், சாக்கடை நீர் கால்வாய் தூர்வாராததால் துற்நாற்றம் வீசுகிறது. அது அவர்களுக்கே பிடிக்கவில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் என்னுடன் பேசவில்லை என்றும், ஆதவ் அர்ஜூனா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்றும், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளதாகவும், அதனை உடைக்க வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அது நடக்காது. என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami retorts that it was Stalin DMK regime that betrayed the country