#சற்றுமுன் || புழல் சிறைக்கு நேரிடியாக சென்ற எடப்பாடி கே பழனிச்சாமி.! ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நடந்த சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை,  அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையில் நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி சற்றுமுன் சென்னை புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi k palanisami meet to jeyakumar in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->