சகோதரருடன் ஆஜரான செந்தில் பாலாஜி! அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த ஆணை!
ED Case Senthilbalaji DMK
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, வழக்கில் முக்கிய நகர்வு ஏற்பட்டது.
இடையீட்டு மனு தாக்கல்
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட மூல வழக்கில் (Primary Case) ஒரு இறுதி முடிவு எட்டப்படும் வரை, அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) தொடர்ந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இடையீட்டு மனுவைப் பரிசீலித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், இதுகுறித்து நவம்பர் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு ஆணை பிறப்பித்தது.
English Summary
ED Case Senthilbalaji DMK