மத்திய பட்ஜெட் 2026: எந்த எந்த பொருட்கள் விலை குறையும் மற்றும் உயரும்..? - Seithipunal
Seithipunal


2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 

இந்த 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி மாற்றங்களால், ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கும் வகையில், சலுகைகள் கிடைத்துள்ளன. அதாவது மருத்துவத்துறைக்கு சாதகமான வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

அடுத்தாக, இலத்திரனியல் உபகரணங்களில், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கல்விக்காகப் பணம் அனுப்புவோருக்கு சாதகமாக அதன் மீதான TCS வரி 02 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சோலார் பேனல் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி பாகங்கள் மீதான வரி விலக்கினால், பசுமை ஆற்றல் சார்ந்த பொருட்களும் மலிவாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அதே நேரத்தில், ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் விலை அதிகரிக்கக்கூடும். மேலும், இறக்குமதி செய்யப்படும் சொகுசு கைக்கடிகாரங்கள், மதுபானங்கள் மற்றும் காபி தயாரிக்கும் இயந்திரங்கள் போன்ற பொருட்கள் இனி கூடுதல் விலைக்கு விற்கப்படும்.

அத்துடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, பங்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ள வரி மாற்றங்கள் முதலீட்டுச் செலவை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட், உள்நாட்டு உற்பத்தியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which products will become cheaper and which will become more expensive in the Central Budget 2026


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->