பேபி பிறக்கவே 10 மாசம் ஆகும்பா.. செத்த பொருங்கப்பா., அடேங்கப்பா துரைமுருகன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 

அந்த வகையில் வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூடியிருந்த பொதுமக்கள் இடையே அவர் பேசியதாவது,

"நான் வாக்கு கேட்க வரவில்லை என்றால் கூட திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க தான் போகிறீர்கள். ஆனால், உங்களில் யாராவது ஒருவர் 'துரைமுருகன் வந்து ஓட்டு கேட்டானா?' என்று சொல்லி விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நான் வாக்கு கேட்க வந்துள்ளேன்.

பஞ்சாயத்து தலைவர் நல்லவரா., கெட்டவரா என்பதை நாம் அறிந்து வாக்களிக்கவேண்டும். பஞ்சாயத்து தலைவர் நல்லவனாக இருந்தால் ஒதுக்கப்பட்ட 30 மின் விளக்குகளையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனாக இருந்தால் ஐந்து விளக்குகளை போட்டு விட்டு, மீதியை அவர் பொண்டாட்டி காதுக்கு அணிகலனாக மாட்டிவிடுவார்.

அதனால், நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். புதிதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மாதத்தில் மின்சாரம் வழங்கப்படும். ஆட்சிக்கு வந்த இந்த மூன்று மாதத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு குழந்தை பிறக்கவே 10 மாதம் ஆகிறது. இந்த மூன்று மாதத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களிடையே பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan say about manifesto 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal