முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு இதுதான் காரணம்.! துரைமுருகனின் பேட்டியால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள லாக்கப்புரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கிராம சபை கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுகவின் பொருளாளர் துரைமுருகன் அவர்கள் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

ஆளும்கட்சியான அதிமுக தனது எம்.எல்.ஏக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த விதமான முயற்சியும் எடுப்பதில்லை., இந்த தவறை திராவிட முன்னேற்ற கழகமும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். 

இது போன்று நடைபெறும் கூட்டங்களில் மக்கள் கூறும் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் பேசி., அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை வற்புறுத்தி மக்கள் பயனடைய செய்வோம்., மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பிரச்சனைகளை குறித்து கேட்டு அதற்க்கான தீர்வுகளை மேற்கொள்வதுதான் மகத்தான சக்தி. 

கடவுள்களின் சிலையானது திருட்டு என்பது ஆபத்தான ஒன்று., இந்த செய்தியானது கடவுளை வணங்குபவர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயத்தில் ஒன்று., கலைநயம் மிகுந்த சிலைகள் திருட்டு போவது அல்லது திருடப்படுவது அவமான செயல்களில் ஒன்று. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டித்த பிறகு திடீரென அவரது நேர்மை குறித்து சோதனை செய்வது வேடிக்கை தனமான செயல்களில் ஒன்று. 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் உயிரிழப்பு குறித்த சந்தேகத்தை சி.பி.ஐ வழக்காக முதலிலேயே மாற்றி விசாரணை மேற்கொண்டிருந்தால் பல சர்ச்சைகள் தற்போது ஏற்பட்டிருக்காது என்று கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

durai murugan press meet


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->