பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவானது...!- திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பிரேமலதா...!
dream that making many years come true Premalatha joining DMK alliance
விருத்தாசலத்தில் நடைபெற்ற சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஊடகங்களிடம் உற்சாகமாக கருத்துகளை பகிர்ந்தார். “தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தின் முக்கிய அத்தியாயத்தை விருத்தாசலம் தொகுதியில் தொடங்கி, அங்கு வெற்றிக்கொடி நாட்டினார்.

அந்த நினைவுகள் இன்று வரை எங்கள் மனதிலும், உயிரிலும் ஆழமாக பதிந்துள்ளன. விருத்தாசலம் எங்களுக்கு ஒரு தொகுதி மட்டுமல்ல, அது உணர்வுகளின் அடையாளம்.இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்று, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விஜயகாந்த் கனவு கண்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்ற உறுதியாக இருக்கிறேன்.
2006ஆம் ஆண்டு அவர் இந்த தொகுதியை முன்மாதிரியாக மாற்றியதைப் போல, இந்த முறை நாங்களும் தீவிர உழைப்பின் மூலம் விருத்தாசலத்தை சிறந்த முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம். பல புதுமையான திட்டங்கள் தயாராக உள்ளன” என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசுகையில், “தேமுதிக-திமுக கூட்டணி உருவாக வேண்டும் என்பது பல ஆண்டுகளாக இருந்த ஆசை. விஜயகாந்த் மற்றும் கருணாநிதி இருந்த காலத்திலேயே இது நடக்க வேண்டிய ஒன்று.
ஆனால் தாமதமாகினாலும் இப்போது அது நனவாகியுள்ளது. ஏன் இதற்கு இவ்வளவு காலம் ஆனது என்ற வருத்தம் இருந்தாலும், தற்போது உருவான இந்த கூட்டணி மக்கள் மனதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் முடிவு மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. நல்ல எண்ணங்களோடு முன்னேறினால் வெற்றி நிச்சயம் எங்கள்தான்” என அவர் தெரிவித்தார்.
English Summary
dream that making many years come true Premalatha joining DMK alliance