திமுகவில் அதிரடி மாற்றங்கள் உறுதி...! - தொண்டர்களை உற்சாகப்படுத்திய மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு...!
Dramatic changes confirmed DMK MK Stalin announcement that encouraged workers
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அரசியல் அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவர் பேசியதாவது,"திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு நடைமுறைகளில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
கட்சிப் பொறுப்புகளை முழுமையாக செயல்படுத்த முடியாது என்று நினைப்பவர்கள் தாமாக முன்வந்து விலகிக் கொள்ளலாம்.கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத நிலை தொடர்ந்தால் வெற்றியை எட்டுவது சாத்தியமல்ல.
எனவே கோஷ்டி அரசியலை முற்றிலும் கைவிட வேண்டும்.மாவட்டங்களின் செயல்பாடுகள், களநிலை சூழல்கள் மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனிக்குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dramatic changes confirmed DMK MK Stalin announcement that encouraged workers