இந்திய ஜனநாயகம் மாண்டு விடாமலும், பணநாயகமாக மாறிவிடாமலும் தடுப்பதற்கான தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் அச்சம் காரணமாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பரப்புரை எளிமையாகியிருக்கிறது; இனி இதுவே நிரந்தரமான சட்டமாக இயற்ற வேண்டும்  என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமைகளைப் போற்றும் தேசிய வாக்காளர்கள் நாளில், இந்திய ஜனநாயகம் மாண்டு விடாமலும், பணநாயகமாக மாறிவிடாமலும் தடுப்பதற்கான தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அனைவரும் குரல் கொடுப்போம்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பரப்புரை எளிமையாகியிருக்கிறது; கோடிக்கணக்கில் செலவழிக்கும் மாநாடுகளும், பேரணிகளும் இல்லை; அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே பரப்புரை செய்யும் காட்சிகளை காண முடிகிறது!

இந்தியத் தேர்தல் முறைக்கு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் பரப்புரை விதிவிலக்கு தான். ஆனால், இந்த விதிவிலக்கே இனி விதியாக வேண்டும். அதேபோல், தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்."

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish NationalVotersDay


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->