தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டம் - டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி  தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது  தடுக்கப்படும்.  அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு  கடந்த மாதம் நடந்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம் என்று  பாமக கூறியிருந்தது. அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட  வேண்டும்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.  இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say About TN Jobs For Tamil People law


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->