வண்ணாரப்பேட்டை மேட்ரோ ரயில் நிலையத்திற்கு மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் பெயர் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


வண்ணாரப்பேட்டை மேட்ரோ ரயில் நிலையத்திற்கு மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் பெயர் வைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,

"சென்னை இராயபுரம் பகுதியில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து மறைந்த மக்கள் மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரனின் மூன்றாவது நினைவு நாள் இன்று. 

இந்த நாளில் அவரது சேவையை நினைவு கூர்வோம்; அவரது நினைவை போற்றுவோம்!

வட சென்னை மக்களால் போற்றப்படும் மருத்துவர் ஜெயச்சந்திரனின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரை  சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு  அரசைக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss About Dr Jeyachandran


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->