'ஈட்டி மனிதர்' நீரஜ் சோப்ராவுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து.!
Dr Anbumani Ramadoss Wish Neeraj Chopra 2022
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற 'ஈட்டி மனிதர்' நீரஜ் சோப்ராவுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

"அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தந்து வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Wish Neeraj Chopra 2022