மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மாணவர்களின் நியாமான கோரிக்கையை ஏற்றுக்கொன்று மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள  முதுநிலை மருத்துவ நீட் (NEET - PG) தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை.  அவற்றை  மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மிகவும் தாமதமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  அதனால் மாணவர் சேர்க்கை தாமதமாகக் கூடும்!

கலந்தாய்வு தாமதமானதால், 2021-ஆம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களால், 2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் 21-ஆம் தேதி நடத்தப்பட்டால், பல மாணவர்களுக்கு வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது!

நீட் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தான் நடைபெற்றது. மாணவர்கள் நலனே  முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவ நீட் (NEET - PG) தேர்வை தேசிய  தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about Neet Exam postpone issue May 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->