தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை - மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,! - Seithipunal
Seithipunal


இலங்கை சிறைகளில் கடந்த திசம்பர் 18-ஆம் தேதி முதல் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் படகுகளும் மீட்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இலங்கை சிறைகளில் கடந்த திசம்பர் 18-ஆம் தேதி முதல் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நன்றியும், பாராட்டுகளும்!

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் படகுகளும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசிடம் பேசி அந்நாட்டு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மத்திய அரசு மீட்க வேண்டும்!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும், இந்தியா - இலங்கை ஐந்தாவது கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைந்து நடத்தவும் மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Happy For Tamil Fisherman Release


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->