மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதீங்க...! 18,107 ஆசிரியர் பணியிட விவகாரத்தில் தமிழக அரசை வெளுத்து வாங்கிய எச்.ராஜா...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கல்வித்துறையின் நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள தமிழக பாஜக, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,“லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக முதலமைச்சரே, உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வுகளில் வெற்றி பெற்று ஆயிரக்கணக்கான தகுதியான ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்த தடையும் இருக்க முடியாது.ஏற்கனவே பல அரசு பள்ளிகளில் போதுமான கட்டிட வசதிகள் இல்லாமை, அடிப்படை கழிவறை வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய நிலையில், அவர்களுக்கு தரமான கல்வியை வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுவது வேதனையளிக்கிறது.

இந்த விவகாரத்தில் உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை அவசியமாகிறது.மேலும், தமிழக பல்கலைக்கழகங்களில் 67 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது உயர்கல்வித்துறையின் மோசமான நிலையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. இதன் விளைவாக, தமிழக உயர்கல்வித்துறை கடுமையான பின்னடைவை சந்தித்து வருகிறது.

பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்பி கல்வித்துறையை வலுப்படுத்துவது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையை புறக்கணிக்காமல், அவர்களின் எதிர்கால நலனில் முழு அக்கறையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தமிழக பாஜக உறுதியுடன் வலியுறுத்துகிறது".இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont play future students H Raja who took Tamil Nadu government to task over issue 18107 teacher posts


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->