'பின்தொடர வேண்டாம்'...உத்தரவு புறக்கணிப்பு...! - விஜய் காரில் ஏறி அலப்பறை செய்த இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கிறார். அதன்படி, காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகில், மேலும் 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் சந்திப்பில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளார்.

வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் இந்த பயணத்திற்காக, இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சாலை மார்க்கமாக விஜய் புறப்பட்டார்.

அவரது வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், வழியெங்கும் திரண்டு அவரை வரவேற்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஜய்யின் கார் சென்றுகொண்டிருந்தபோது, தவெக தலைமையகம் “காரை பின்தொடர வேண்டாம்” என்று முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தாலும், அதை மீறி சிலர் கட்டுப்பாட்டை இழந்து விஜய்யின் காரின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் ஒருவர் காரின் முன்கண்ணாடியில் முத்தமிட்ட சம்பவம் கூட நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைமை பதற்றமாக மாறிய நிலையில், விஜய்யின் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் உடனடியாக தலையிட்டு, காரின் மீது ஏறியவர்களை விலக்க முயன்றனர்.

இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி, விஜய்யின் பிரசாரப் பயணத்தில் ஒரு பரபரப்பான திருப்பத்தை உருவாக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont follow disobeying order fans who climbed Vijay car and made mess


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->