திமுகவில் SC பிரிவினர் திடீர் போர்க்கொடி! கொந்தளிக்கும் திமுக தலைமை!  - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் , திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் எனவும், அதனோடு மேலும் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி மாவட்ட செயலாளர் டு திமுக தலைமைக் கழக  முதன்மைச் செயலாளர் ஆக  மாறியிருக்கும் கே.என்.நேரு பேசுகையில், நான் மாவட்டப் பொறுப்புக்கு வந்து 7 வருடங்கள் ஆன பிறகுதான், கட்சியின் நிர்வாகிகள் என்னை அங்கீகரித்தார்கள். அதுவரை கட்சித் தோழர்களோடு நீங்கள் இருந்தால் உங்களை யாரும்  அசைக்க முடியாது என பேசினார். மேலும், கட்சி தான் முக்கியம், அதனால் நிர்வாகிகள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து விடுங்கள் என நேரு பேசி முடித்தார். 

இதே கூட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர்  வைரமணி பேசினார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட ம்,மக்களில் 80% பேர் திமுகவினருக்கே ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் கட்சியில் அவர்களுக்கென தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டோருக்கான தனி பிரிவை கட்சியில் உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை திமுக தலைமை ரசிக்கவில்லை என்பது கொசுறுத்தகவலாக வெளியாகியுள்ளது. 

அண்மையில் தாழ்த்தப்பட்டவரர்களை அவமதிக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பது திமுக போட்ட பிச்சை, என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK trichy administrator spoke about SC section in DMK


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->