காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு தி.மு.க. மாணவர் அணி கோவையில் பதில் சொல்லியிருக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலின்..!
DMK student team has responded to the sentiments of Tamil Nadu students in Coimbatore says Stalin
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
காவியா - கல்வியா? 'படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது திமுக மாணவர் அணி!
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்.' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
DMK student team has responded to the sentiments of Tamil Nadu students in Coimbatore says Stalin