420-யை காணும்.! இறுதி நாளில் வெளிவந்த உண்மை., வலைவீசி தேடும் திமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக விருப்பமனு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வந்தனர்.

அதுவும் மூடநம்பிக்கைக்கு எதிரான திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட சுமார் 3000 பேர் சுபமுகூர்த்த நாள் பார்த்து, விருப்பமனு மனு தாக்கல் செய்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

தமிழகம் புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனுக்களை வழங்க இன்றே இறுதி நாள். இறுதி நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று மாலையுடன் திமுகவின் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 17ஆம் தேதி துவங்கிய திமுகவின் விருப்ப மனு வினியோகம் இன்று நிறைவுபெற்றது.

இதில், 8388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 7967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டது. 420 பேர் விருப்ப மனுக்களை பெற்று கொண்டு, அதனை பூர்த்தி செய்து திமுக தலைமை அலுவலகத்தில் அளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அந்த 420 பேரையும் திமுகவினர் வலைவீசி தேடிவருவதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK some election petition issues


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->