41 பேர் பலி: குற்ற உணர்ச்சியால் சட்டசபைக்கு வரவில்லையா செந்தில்பாலாஜி? சந்தேகம் எழுப்பும் அதிமுக!
DMK Senthilbalaji ADMK
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று சட்டப்பேரவையில் KarurTragedy-யில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மக்களை இழந்த வலிகளையும், அரசை நோக்கிய கேள்விகளையும் சுமந்துக்கொண்டிருந்த போதும், 41 உயிர்களுக்கு மதிப்பளித்து, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மவுன அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கரூர் மக்களின் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி
இந்த இரங்கல் தீர்மானத்தின் போது அவையில் இல்லை.
ஏதேனும் குற்ற உணர்ச்சியோ?
மனசாட்சி உறுத்தியதோ? ன்னு ஒரு டவுட்டு.... (பி.கு. : Conditions-ah Follow பண்ண வேண்டிய அன்பில் மகேஷ் Also Absent!) என்று தெரிவித்துள்ளது.
