பெண்கள் பாதுகாப்பே திராவிட மாடல் என மேடையில் கனிமொழி முழங்க, மேடைக்கு கீழே பெண் காவலர்களிடம் சேட்டை செய்த திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


மறைந்த திமுக மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் அங்கே கூட்டத்திற்கு வந்திருந்த திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் அநாகரிகமாக நடந்திருக்கின்றனர். இதனை கவனித்த மற்ற காவலர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். திமுக இளைஞர்கள் பிடிப்பட்டதும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

சலசலப்பு அதிகரித்ததை கவனித்த எம்எல்ஏ பிரபாகரன் ராஜா, பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என கெஞ்சியதையடுத்து, பெண் காவலர்களிடம் அநாகரிமாக நடந்து கொண்ட இருவரையும் காவலர்கள் எச்சரித்து விடுவித்து அனுப்பினார்கள்.  

திராவிட மாடல் அரசு பெண்கள் உரிமையை காப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முன்மாதிரியாக இருக்கிறது, முக்கியத்துவம் அளிக்கிறது என மேடையில் கனிமொழி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திமுகவினர் இருவர் பெண் காவலர்களிடமே அநாகரிமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

பெண்களுக்கு பாதுகாப்பு தருவது தான் திராவிடம் மாடல் ஆட்சி என பேசினால் மட்டும் போதுமா? திமுகவினர் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு லட்சணம் இது தானா? என தலையில் அடித்துக் கொள்ளாமல் கலைந்து சென்றனர் பொதுமக்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK persons misbehave with women police in DMK meeting in front of Kanimozhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->