ஆளுநர் ரவியை புறக்கணித்த திமுக நிர்வாகியின் மனைவியான மாணவி! யார் சொல்லியும் நான் இதை செய்யவில்லை என்று பேட்டி! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மொத்தம் 759 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த நேரத்தில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகரிடம் பட்டம் பெற்றார். இதனால் அரங்கில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீன் ஜோசப், “தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும். தான் யார் சொல்லியும் இதுபோல் செய்யவ்விலை என்றும், தனது கணவர் நாகர்கோயில் மாநகர திமுக துணை செயலாளராக இருப்பதாகவும் மாணவி தெரிவித்தார். (மாணவி அளித்த பேட்டி விவரம் : https://youtu.be/mQrFvAItkGM?t=109 )

மேலும், இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Person wife As student refused to receive degree from Tamil Nadu Governor


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->