தி.மு.க. கூட்டணி கட்சிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு தரவேண்டும்: மக்கள் நீதி மய்யம் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்..! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதன் போது 02 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்டுள்ளன. அவை பின்வருமாறு:- 

தீர்மானம் 01 

2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின்போது திராவிட முன்னேற்ற கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 06 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல்ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

தீர்மானம் 02 

மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசன் அவர்களுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட  முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

என்று இரண்டு தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK passes resolution asking alliance parties to support Kamal Haasan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->