டம்மி! என்னிடம் அதிகாரம் இல்லை! புலம்பிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி–பதில் நேரத்தில், அதிமுக உறுப்பினர் ஜெயசீலன் தன் கூடலூர் தொகுதியில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இல்லாத நிலை பற்றி கருத்து தெரிவித்தார்.

மேலும், "எனது தொகுதியில் தொழில்துறையோ, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோ இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்க சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு முன்வர வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "நான் ஏற்கனவே என் துறையில் உள்ள சிக்கல்களை தெரிவித்துள்ளேன். எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. பல தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் என் துறையின் கீழ் இயங்குவதில்லை.

மிகவும் குறைந்த அளவிலானதுதான் என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் தொழில்துறையின் கீழ் செயல்படுகின்றன. எந்த துறையிடம் அதிகாரமும், நிதியும் உள்ளதோ, அவர்கள் செயல்படுத்துவார்கள். என்னை கேட்டு என்ன செய்வது? என்னிடம் அதிகாரமே இல்லை" என்றார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "இவ்வாறு தள்ளிப் பேச வேண்டாம். பதில்களை நேர்மையாகவும், ஊக்கமாகவும் கூறினால் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்" என gentle ஆன ஆலோசனை வழங்கினார்.

இதுகுறித்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிமுக நிர்வாகி கோவை சத்யன், டைடல் பார்க் மற்றும் நியோ டைடல் பார்க் ஆகியவற்றிற்கான அதிகாரம் ஐடி அமைச்சகத்தின் கீழ் வரவில்லை, அது கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறை அமைச்சகத்திடம் உள்ளது. 

மருமகனும், மருமகனும் 20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக வெளியான தகவலுக்காக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறையிலிருந்து டம்மியான ஐடி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Palanivel Thiagarajan Appavu AIADMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->