உலக நடன தினம் - நீருக்கடியில் நடனமாடிய சிறுவர், சிறுமி.!!
two childrens dance in under water for world dance day
உலக நடன தினத்தை முன்னிட்டு இரண்டு பேர் ரமேஷாஹ்வரம் கடல்பகுதியில் நீருக்கு அடியில் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 29-ஆம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் படி நேற்று கொண்டாடப்பட்ட உலக நடன தினத்தை முன்னிட்டு நடன ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என்று அனைவரும் நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவரின் மகள் தாரகை ஆராதனாவும், இவரது மாணவர் அஸ்வின் பாலா இருவரும் சேர்ந்து நீருக்கடியில் நடனம் ஆடியுள்ளனர்.
இது குறித்து இருவரும் தெரிவித்துள்ளதாவது:- “கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு, நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடன நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், ராமேசுவரத்தில் உள்ள பாஜ் ஜலசந்தி கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் விழிப்புணர்வு நடனம் மேற்கொண்டோம்” என்று தெரிவித்தனர்.
English Summary
two childrens dance in under water for world dance day