ஒசாகா திரைப்பட விருதுகள்: அஜித்க்கு சிறந்த நடிகர் விருது!
Osaka Tamil International Film Festival award ajith
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2023-க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு முதல் நடக்கக்கூடிய இந்த விழாவில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
சிறந்த நடிகராக ‘துணிவு’ படத்திற்காக அஜித் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பத்ம பூஷண் விருது பெற்ற அவர், மேலும் ஒரு முக்கிய அங்கீகாரம் பெற்றுள்ளார். ‘லியோ’ படத்தில் நடித்த த்ரிஷா சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2023 விருது பெறுபவர்கள் விபரம்:
-
சிறந்த படம் – மாமன்னன்
-
சிறந்த நடிகர் – அஜித் குமார் (துணிவு)
-
சிறந்த நடிகை – த்ரிஷா (லியோ)
-
சிறந்த இயக்குநர் – வெற்றிமாறன் (விடுதலை-1)
-
சிறந்த ஒளிப்பதிவாளர் – மனோஜ் பரமஹம்சா (லியோ)
-
சிறந்த திரைக்கதையாசிரியர்கள் – நெல்சன், அல்ப்ரெட் பிரகாஷ் (ஜெயிலர்), விக்னேஷ் ராஜா (போர் தொழில்)
-
சிறந்த தயாரிப்பாளர்கள் – மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட்ஸ் (குட் நைட்)
-
சிறந்த துணைநடிகர் – விக்ரம் (பொன்னியின் செல்வன் - 2)
-
சிறந்த துணைநடிகை – ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் - 2)
-
சிறந்த வில்லன் – ஃபஹத் ஃபாசில் (மாமன்னன்)
-
சிறந்த எண்டர்டெயினர் – எஸ்.ஜே.சூர்யா (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்)
-
சிறந்த எடிட்டிங் – பிலோமின் ராஜ் (லியோ)
-
சிறந்த நடன இயக்குநர் – தினேஷ் மாஸ்டர் (லியோ)
-
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (லியோ)
-
சிறந்த கலை இயக்கம் – மிலன் பெர்னாண்ட்ஸ் (துணிவு)
-
சிறந்த விஎஃப்எக்ஸ் – அல்ஜாக்ரா ஸ்டூடியோ (பொன்னியின் செல்வன் 2)
-
சிறந்த ஒலிக்கலவை – எஸ்.ஒய்.என்.சி சினிமாஸ் (லியோ)
-
விமர்சன ரீதியாக சிறந்த படம் – குட் நைட்
English Summary
Osaka Tamil International Film Festival award ajith