கரும்பு விவசாயிகளுக்கான ஆதாய விலை ரூ.329! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Sugan cane Central govt announce
2025-26 ஆம் ஆண்டுக்கான கரும்பு சாகுபடி பருவத்தில், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, விவசாயிகள் ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.329.05 வரை பெறுவார்கள்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 10.25% அடிப்படை மீட்பு விகிதத்துக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூ.355 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அடிப்படை மீட்பு விகிதத்தைத் தாண்டி, ஒவ்வொரு 0.1% கூடுதலுக்காக கூடுதல் ரூ.3.46 வழங்கப்படும். அதே நேரத்தில், மீட்பு விகிதம் குறைவாக இருந்தால், அதே அளவு விலையும் குறைக்கப்படும். எனினும், 9.5% க்கும் குறைவான மீட்பு விகிதம் கொண்ட ஆலைகளுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்பட மாட்டாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Sugan cane Central govt announce