ஈரான் தாக்குதல் எதிரொலி: டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி... சேலத்தில் பார்சல் டீ விலை ரூ.10 உயர்வு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், பெரும்பாலான ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க சில உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி வருகின்றன.இந்தச் சூழலில், சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சேலத்தில் உள்ள டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ. 20-க்கு விற்கப்பட்ட அரை பார்சல் டீ தற்போது ரூ. 10 உயர்ந்து ரூ. 30 ஆகவும், ஒரு பார்சல் டீ ரூ. 40 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பலகாரங்களின் விலையும் பல இடங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு டீக்கடைகளின் முன்பே உரிமையாளர்கள் ஒட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fallout from Iran Attack Shock Tea Lovers Price Takeaway Tea Salem Rises by 10


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->