போர் எதிரொலி: இந்தியாவில் முடங்குமா இணையச் சேவை...? - எல்பிஜி தட்டுப்பாட்டால் புதிய சிக்கல்!
War Fallout Internet Services India Grind Halt New Crisis Arises Due LPG Shortages
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் LPG சிலிண்டர் தட்டுப்பாடாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நிலை நீடித்தால் மொபைல் நெட்வொர்க் மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

பொதுவாக மொபைல் டவர்களும் இணைய மையங்களும் மின்சாரத்தால் இயங்குகின்றன; மின்சாரம் தடைபடும் போது அவற்றைச் செயல்பாட்டில் வைக்க LPG அல்லது டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எரிபொருள் விநியோகத்தில் பெரும் முடக்கம் ஏற்பட்டால், இந்த ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுத் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும், தற்போதைய சூழலில் இந்தியாவில் உடனடி பாதிப்பு ஏதுமில்லை என்றும், முக்கிய மையங்களில் பேட்டரி மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதால் குறுகிய காலத்தில் சேவைகள் தடையின்றி கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச எரிபொருள் சிக்கல் நீண்டகாலம் தொடர்ந்தால் மட்டுமே அதன் தாக்கம் தொலைத்தொடர்பு துறையில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
English Summary
War Fallout Internet Services India Grind Halt New Crisis Arises Due LPG Shortages