விஜய் ஆட்சி நடத்த திமுக முட்டுக்கட்டை போடாது...ஆனா...! - மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!
DMK not obstruct Vijay rule but mK Stalin sensational statement
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் உருக்கமான அரசியல் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், “தஞ்சை மண்ணில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை மனமார வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி மற்றும் பூண்டி கலைச்செல்வன் ஆகியோர் கழகப் பாதைக்காக வாழ்நாளையே அர்ப்பணித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்த குடும்ப விழாவில் பங்கேற்றது நெகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது” என குறிப்பிட்டுள்ளார்.மேலும், “சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிமாவட்ட பயணமாக திருச்சிக்கு வந்தேன்.
விமான நிலையத்தில் இறங்கிய தருணத்திலிருந்தே கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் வெளிப்படுத்திய பாசமும் உணர்வும் என்னை ஆழமாகத் தொட்டது. உங்களின் மனநிலையை நான் அறிவேன்.
என்னைப் பற்றிய உங்கள் நம்பிக்கையையும் உணர்கிறேன். நமக்குள் வார்த்தைகளைக் கடந்து நிற்கும் உறவு உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.அதேபோல் புதிய ஆட்சியைச் சுட்டிக்காட்டி, “புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்துவதில் நாம் தடையாக இருக்க விரும்பவில்லை.
அவர்கள் நிர்வாகத்தை முன்னெடுக்கட்டும். ஆனால் தங்களின் செயலிழப்பை மறைப்பதற்காக எங்கள் மீது அவதூறு அரசியலை நடத்தினால், அதற்கான விளக்கத்தை உறுதியாக அளிப்போம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டால், அதற்கு உண்மையின் வெளிச்சத்தை மக்கள் முன் கொண்டு வர வேண்டும். உடன்பிறப்புகள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK not obstruct Vijay rule but mK Stalin sensational statement