காவல்துறையினரை ஆபாசமாக வசைபாடிய திமுக நாகர்கோவில் ச.ம.உ மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க நாகர்கோவில் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் "உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின்" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று நாகர்கோவிலில் வந்திருந்தார். இதற்கு நகரின் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு, திமுக கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு அளித்திருந்தனர். 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்தை சீர் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் மீது திமுக கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை காவல்துறையினர் அகற்ற முயற்சித்துள்ளனர். 

இதன்போது, அங்கு வந்த நாகர்கோவிலில் தி.மு.க எம்எல்ஏ சுரேஷ்ராஜன் காவல்துறையினரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் மீது நேசமணி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Nagarcoil MLA SureshRajan Abuse Speech police File Complaint and Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal