திமுக எம்பி மகன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தனது கணவர் மற்றும் மகன் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்ததாக கூறி, திமுக எம்பி மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மாணிக்கம் நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் அளித்த புகாரின் விவரம்: "என் கணவர் சமயமுத்து, தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்துகிறார். ஜூலை 1ஆம் தேதி நிஷாந்த் என்றவர் கடைக்கு வந்து, தேங்காய்த் தட்டு வாங்கும்போது, என் கணவர், மகன் மற்றும் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களை தாக்கினார். இந்த சம்பவம் செல்போனிலும், கடையின் சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது.

இதுதொடர்ந்து என் கணவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் மனு ரசீது வழங்கவில்லை. நிஷாந்த் ஒரு வழக்கறிஞர் என்றும், அவர் திமுக தேனி எம்பியின் மகனாக இருப்பதாலும், அவருக்கு சாதகமாகவே போலீசார் செயல்படுகிறார்கள்.

பின்னர் நிஷாந்த் தரப்பில் போலி புகார் பெறப்பட்டு, என் கணவர் மற்றும் மகன் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டது. அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளும் எடுத்துச் செல்லப்பட்டு உண்மையான ஆதாரங்களை மறைக்க முயற்சிக்கப்படுகிறது.

நிஷாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மகேஸ்வரி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP theni son woman complaint


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->