சிக்கிய லாரிகள், போலீஸ் நடவடிக்கையால், திமுக எம்பி மகன் எஸ்கேப்! - Seithipunal
Seithipunal



நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில்  ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியானதால் விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்துள்ளனர். விசாரணையில் பல கல்குவாரிகள் விதிகள் மீறி செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை சில நூறு கோடி ரூபாய்க்கு மேல் செல்வதால் யாரும் கல்குவாரிகளை நடத்த முன்வரவில்லை என கூறப்படுகிறது. 

இருந்த போதிலும் சில காவல் துறை அதிகாரிகளின் துணையுடன் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக நெல்லை மாவட்ட எல்லையில் விஸ்வநாதபுரம் வழியாக கனிம கடத்தல் நடப்பதாக தகவலின் பேரில் போலீஸார் கண்காணிப்பில் ஈடும்போது, அவ்வழியாக வந்த இரு கனரக வாகனங்களை சோதனை செய்தபோது அனுமதி இன்றி சரள் மண் ஏற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து லாரி டிரைவர்கள் ரமேஷ் மற்றும் ஜெயபாலன்  இருவரையும் கைது செய்த போலீஸார் லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

போலீசார்  நடத்திய விசாரணையில் அந்த  இரண்டு கனரக வாகனங்களும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தாவும்,  அதன் காரணமாக போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டதால் அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆளும் கட்சியை சேர்ந்த எம்பியின் மகன் கனிம வள கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Son Dhinakaran Escape


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->