திருமணம், குழந்தை, 10 மாதம்... சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி!
DMK MP Controversy speech
கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கான வீடு கட்ட அனுமதி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்யாணசுந்தரம் எம்.பி., விழாவில் பேசும்போது, “அனைத்திற்கும் அவசரப்படக்கூடாது. திருமணமாகி 10 மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும். திருமணத்துக்கு முன்பு அல்லது திருமணம் செய்யும் நாளன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறுவிதமாகத்தான் குழந்தை பிறக்கும்.
முன்கூட்டியே காதல் செய்து அதனால் கர்ப்பமானால் திருமணம் ஆன நாளில் குழந்தை பிறக்கும். அவசரப்பட்டு, கோபப்பட்டு பேசுவதால் நல்லது செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். மக்கள் தங்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கள் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, விதண்டாவாதம் செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.
தற்போது இவரின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
English Summary
DMK MP Controversy speech