வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட திமுக எம்பி ஆ ராசா! பறிபோகிறது எம்.பி., பதவி? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இந்து கடவுள்களையும், இந்து மக்களையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் திமுக எம்.பி., ஆ. ராசா, அண்மையில் மிக கீழ்த்தரமான கருத்தை தெரிவித்துள்ளதாக, பாஜக உள்ளிட்ட கட்சைகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆ.ராசாவின் மக்களவை உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என்று, பாராளுமன்ற சபாநாயகருக்கு, சிவசேனா கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

"இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

மேலும், பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும், இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது மூன்று மாதம் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்ய வேண்டும் என்று, பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP A Rasa hindu people speech issue sep


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->