பாஜகவினர் மக்களின் கழுத்தை அறுக்கும் ஹிட்லர், முசோலினி! கொளுத்தி போட்ட மனோ தங்கராஜ்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நாடு முழுவதும் அவருக்கு எதிரான கண்டன குரல் எழுந்துள்ளது.

நாட்டு மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி மற்றும் பீகார் மாநில காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் "சனாதனம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது என்பது குறித்து விளக்க பாஜகவினர் தயாராக உள்ளனரா? சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை.

பாஜகவினர் ஹிட்லர் போன்று முசோலினி போன்று பொய்யையே திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகின்றனர். அவர்களுக்கும் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்து சமூகத்தை அவர்கள் நேசிக்கவும் இல்லை. அதை உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  கார்ப்பரேட்டை வாழ வைக்கும் ஒரு கட்சி, வாக்கு வங்கிக்கு மட்டுமே மதத்தை பயன்படுத்தி வருகிறது" என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் உதயநிதியின் கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் தற்போது பாஜகவை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister ManoThangaraj has criticized BJPian are like Hitler


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->