ஆடு மேய்த்த அண்ணாமலையை IPS ஆக்கியது திராவிடம்! மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது BJP-ரஸ் - திமுக அமைச்சர் சர்ச்சை கருத்து! - Seithipunal
Seithipunal


பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். நேரம் கிடைச்சா கோயிலுக்கு போறேன். 

தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்க்கு பதிலளித்துள்ள திமுக அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆடு மேய்த்தவரை IPS ஆக்கியது திராவிடம்..! IPS ஐ மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது BJP-RSS சித்தாந்தம்!

மேலும் அவரின் மற்றும் ஒரு பதிவில், "நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார்.

1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம்.

பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, "சாத்தான் வேதம் ஓதும்" கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா?

சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்ததை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது - Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது.

பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Nainar Nagendran BJP DMK Minster Mano thangaraj 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister mano Thangaraj Controversy speech about BJP Annamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->