#தமிழகம் || மூதாட்டியிடம் வீரத்தை காட்டிய திமுக கவுன்சிலர் தம்பி.! ஆடு, பிரியாணி, அட்டாக்.! வைரல் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே வயதான மூதாட்டியை தாக்கிய திமுக கவுன்சிலரின் சகோதரரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அடுத்துள்ள அக்ரஹார புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி அருக்காணி என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணி அளவில் பேருந்து நிலையத்தில் ஒரு நபருடன் தூய்மை பணியாளர் அருக்காணி பேசிக் கொண்டிருக்கையில், அங்கு வந்த திமுக வார்டு கவுன்சிலர் மசுதாவின் சகோதரர் ஜாபு, மூதாட்டியை கன்னத்தில் அறைந்து, தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டி இழிவுபடுத்தி உள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்த தூய்மை பணியாளர் அருக்காணி தெரிவிக்கையில், "அன்று இரவு 7 மணி அளவில் நான் ஒரு பையனுடன் எப்போதும் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அந்த திமுக பிரமுகரின் தம்பி, இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான் சும்மா இந்த பையனுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், "நீ தோட்டக்காரி பத்து, இருபது ஆடு வைத்து மேச்சல் நடத்திக் கொண்டிருக்கிறாயா?  ஆட்டை அடித்து பிரியாணி போட்டு விடுவேன்" என்று பேசினார்.

மேலும் எனது தாய் மற்றும்என்னை ஆபாசமாக பேசி, என்னை கண்ணத்தில் சராமரியாக அறைந்து விட்டு சென்று விட்டார். அவர் என்னை அடித்தது கூட பரவாயில்லை, எனது தாயை பற்றி அவர் இழிவாக பேசியதனால் தான் நான் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளேன்" என்று அந்த தூய்மை பணியாளர் மூதாட்டி அருக்காணி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MEMBER BROTHER ATTACK OLD WOMEN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->