நாத்தமா? திமுக ஆதரவு செய்தி ஊடகத்தின் அநாகரிக பதிவு... கொந்தளிக்கும் அதிமுகவினர்! - Seithipunal
Seithipunal


திமுகவின் ஆதரவு செய்தி ஊடகமான கலைஞர் செய்தி தொலைக்காட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில், காத்து மேல, நாற்றம் கீழே என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்க பயணம் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பசு மாட்டிற்கு உணவு அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தது.

முன்னாள் முதலமைச்சரை நாத்தம் என்று அரசியல் கட்சிகள் கூட செய்யத் துணையாக அருவருப்பான வகையில், செய்தி ஊடகம் என்ற பெயரில் கலைஞர் செய்தி தொலைக்காட்சி செய்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி ராஜ் சத்தியன் இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், மாடும், விவசாயமும் தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்கள்!

அதை நாத்தம் என்று சொல்வது திமுகவின் DNAவில் ஊறிப்போய் இருக்கும் பண்ணையார்த்தனம்.

மேலே உள்ள படம் உங்கள் வழக்கமான வெற்று விளம்பர நாடகம். 

கீழே உள்ள படம், தலைவாசலில் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, உங்கள் விடியா அரசால் மூன்றாண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கான அடித்தளம்!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, 
போதைப்பொருள் புழக்கம்,
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி,
ஜாதிய தீண்டாமை,

இவை தான் இன்றைய தமிழ்நாடு!

என எதற்கும் பதில் சொல்லாத, விளம்பரம் என்றால் மட்டும் கையசைத்து நடக்கும் பொம்மை முதல்வரின் அங்கீகாரம் பெற்ற தொலைக்காட்சியின் எகத்தாளப் பதிவிற்கான பதிலை தமிழ்நாட்டு விவசாயிகளும், மக்களும் நிச்சயம் திமுகவிற்கு அளிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kalingar TV X Post ADMK Condemn


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->