காங்கிரஸ் மேயர் கேட்ட கேள்வி.. கண்ணீர் சிந்திய திமுக துணை மேயர்..!! கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு..!!
DMK Deputy Mayor shed tears in kumbakonam Corp meeting
கும்பகோணம் மாநகராட்சி மன்ற மேயர் பதவி திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கும்பகோண மாநகராட்சியின் மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேராக திமுகவைச் சேர்ந்த தமிழ் அழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் திமுக சார்பாக கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் "கும்பகோணம் மாநகராட்சியின் செயல்வீரர்" என திமுகவின் துணை மேயரை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த மேயர் சரவணன் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களை பார்த்து "நான் மாநகராட்சியின் மேயராக பதவி வகிக்கும் பொழுது துணை மேயரை செயல்வீரர் எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் எனது பதவிக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு திமுகவின் மாமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பினார். இதனால் கும்பகோணம் மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேயர் சரவணன் கேள்வியால் அதிர்ச்சியான துணை மேயர் தமிழ் அழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மேயர் சரவணன் கேள்விக்கு துணை மேயர் தமிழ் அழகன் பதில் அளிக்கையில் "கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தன் மீது ஏதேனும் வருத்தம் உள்ளதா என முதல்வர் ஸ்டாலின் என்னிடம் கேட்டார். முதல்வர் ஸ்டாலின் என்னை இந்த வார்த்தை கேட்டதே எனக்கு போதும்" என கண்ணீர் மல்க பதில் அளித்தார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
DMK Deputy Mayor shed tears in kumbakonam Corp meeting