நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்..பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு சீனா வருத்தம்!
Exercise restraint China regrets attack on Pakistan
இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம் என பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இதனால் , இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் , இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை 'வருந்தத்தக்கது', இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
English Summary
Exercise restraint China regrets attack on Pakistan