பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்து மோடி அரசு கண்டிப்பாக அளிக்கும்....! - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Modi government will definitely root out terrorism Amit Shah
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்தியுள்ள ''ஆப்ரேஷன் சிந்தூர் '' நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை அடைவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,"பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி நடவடிக்கை ''ஆப்ரேஷன் சிந்தூர்''.
இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தநொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாகவுள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாகவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Modi government will definitely root out terrorism Amit Shah