ஆபரேஷன் சிந்தூர் - 5 இந்திய ஜெட் விமானங்கள் மீது தாக்குதல்.!!
pakisthan shoot five india jet
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆனால், இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என்று இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐந்து இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
English Summary
pakisthan shoot five india jet