மேல் சாதி பொண்ணோட., கீழ் சாதி பையன் உடலுறவு கொண்டால் சாதி ஒழியும்.! திமுக வேட்பாளரின் பிரச்சார வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சாதியை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் யாரும், சாதியை ஒழித்த வரலாறு இல்லை. அப்படி ஒழித்த சாதியை காட்டுங்கள் என்றாலும் காட்ட போவதுமில்லை. ஈவே ராமசாமி தன்னுடைய நாயக்கர் என்ற சாதியை சாகும்வரை சுமந்து கொண்டே தான் சென்றார்.

அவர் எந்த சாதியை ஒழித்ததாக வரலாறு இல்லை. சாதியை ஒழிப்பதற்கான எந்த ஒரு கோட்பாட்டையும் அவர் இயற்றவும் இல்லை. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்பாடு கலப்புத்திருமணம். இது ஒன்றுதான் சாதியை ஒழிக்க பல்வேறு புரட்சி புண்ணாக்குகள் எடுத்துள்ள கொள்கை முடிவு.

கலப்பு திருமணம் செய்தவர்கள் யாரும் தங்களது சாதியை வேண்டாம் என்று சாதி சான்றிதழ் இதுவரை வாங்கியதாக வரலாறு இல்லை. பின்பு எந்த விதத்தில் இவர்கள் சாதியை ஒழித்தார்கள். 

எந்த விதத்திலும் இவர்கள் ஒழிக்கவில்லை. மாறாக சமூகமாக ஒன்றிணைந்து வாழக்கூடிய இந்த தமிழகத்தில், சாதிக் கலவரங்களை தூண்டிவிட்டு அரசியல் செய்யவே இந்த கலப்பு திருமணங்களை ஆதரித்தும், பரிசு கொடுத்தும், கட்டப்பஞ்சாயத்து செய்தும், நாடக காதல் வைத்தும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் எழிலன் முன்பு பேசிய ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில், "மேல் சாதியை சேர்ந்த பெண்னோடு கீழ் சாதியை சேர்ந்த பையன் உடலுறவு கொண்டால் சாதி ஒழிந்துவிடும்" என்று ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த கருத்தை ஏற்கும் பட்சத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சர்ச்சைக்குள்ளான இந்த காணொளி ஒரு முடிவு கிடைக்கும். இல்லை என்றால் இது தொடர்ந்து திமுக மீதான விமர்சனத்தை அதிகப் படுத்தவே செய்யும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK candidate ezhilan viral video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->