'தாக்குதல்களை கைவிடப்பட வேண்டும்'; ஈரானிடம் அவசர கோரிக்கை வைத்துள்ள ரஷ்யா..!
Russia has issued an urgent appeal to Iran to halt the attacks
அமெரிக்கா + இஸ்ரேல் கூட்டுதாக்குதலால் ஈரான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பழிவாங்குவதற்காக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் போர்க்களமாகியுள்ளது. அத்துடன், நீர்வழி போக்குவரத்தில் கச்சா எண்ணெய் வணிக போக்குக்கு பிரதான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடங்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டுமென ஈரானிய அரசாங்கத்திடம் ரஷ்யா அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா வெளியுறவு துறைஅமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருக்கிடையில் இது குறித்துதொலைபேசி உரையாடல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தி, அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுகளுக்கு நகர வேண்டும் என்ற அவசரத் தேவை உள்ளதை ரஷ்யா வெளியுறவு துறைஅமைச்சர் வலியுறுத்தியதாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானின் அணு உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கவால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் ஏற்க முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா+இஸ்ரேல் இணைந்து ஈரானின் புஷெர் அணு மின்நிலையம் அருகே மேற்கொண்ட தாக்குதல்கள் ''மிகவும் ஆபத்தானவை'' என கிரெம்லின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த மோதல் காஸ்பியன் கடல் பகுதிக்கு விரிவடையும் அபாயம் இருப்பதாகவும், இரு தரப்பும் இது குறித்து கவலை வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Russia has issued an urgent appeal to Iran to halt the attacks