சமூக வலைதள ட்ரோலிங் கொடுமை: சினிமாவையே விட்டு விலக நினைத்தேன்...! - நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக் - Seithipunal
Seithipunal


பராசக்தி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகிலும் கவனம் பெற்று வரும் நடிகை ஸ்ரீலீலா, சமூக வலைதள ட்ரோலிங் (Trolling) காரணமாகத் தான் திரையுலகையே விட்டு விலக நினைத்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ராஷி கன்னாவிடம் இணையதள விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, "திரைத்துறைக்கு வந்த புதிதில் கடுமையான ஆன்லைன் ட்ரோல்களைக் கண்டு அதிகம் அழுதிருக்கிறேன். இது நமக்கான இடம் இல்லை, மீண்டும் கல்லூரிக்கே சென்றுவிடலாமா என்று கூட என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்.

அப்போது நான் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவளாக இருந்தேன். ஆனால், தற்போது இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டேன்" என்றார்.அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ராஷி கன்னா, "தற்போதைய சூழலில் ட்ரோலிங் என்பது முன்பை விட மிக மோசமாகிவிட்டது.

சமூக வலைதளங்களில் பார்வைகளுக்காக (Views) பலர் கண்டபடி எழுதுகிறார்கள். ஒருவரின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், சுயநலத்திற்காகப் பொய்யான செய்திகளைப் பரப்பித் தீர்ப்பு வழங்குவது வருத்தமளிக்கிறது.

நீண்ட காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய நற்பெயர், இது போன்ற செயல்களால் கெட்டுவிடுமோ என்ற பயம் இருக்கிறது" என்று தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Agony Social Media Trolling I Even Thought Quitting Cinema Actress Sreeleela Opens Up


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->